சபரிமலை காளகட்டியில் காட்டு யானைகள்: ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி!
ADDED :4339 days ago
சபரிமலை: சபரிமலை யாத்திரையில், காளகட்டி வழியாக வரும் பக்தர்கள், காட்டு யானைகள் குறித்த அச்சத்தில் உள்ளனர். சபரிமலையில், பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரள போலீசாருடன், தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எரிமேலியில் இருந்து காளக்கட்டி வழியாக பம்பைக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அந்த பகுதியில் கூட்டம் கூட்டமாக காட்டு யானைகளும் காட்டு எருமைகளும் நடமாடுவதால், பக்தர்கள் அச்சத்துடன் அப்பகுதிகளை கடக்கின்றனர். இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.