உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளியம்மைபுரம் அய்யப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு

வள்ளியம்மைபுரம் அய்யப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு

குறிச்சி: வள்ளியம்மைபுரம் அய்யப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார். வெள்ளலூர் தர்மசாஸ்தா பக்த ஜனசபா அறிக்கையில், வள்ளியம்மைபுரம் அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக, வினோத் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவிலில், தினமும் மாலை போடுதல், இருமுடி கட்டுதல், அர்ச்சனை, சுயம்வர அர்ச்சனை, இரட்டை புஷ்பாஞ்சலி அர்ச்சனை மற்றும் கணபதி ஹோமம் ஆகியவை நடக்கின்றன. தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 9.00 மணிக்கு உஷ பூஜை, 10.00 மணிக்கு நடை அடைப்பு, மீண்டும் மாலை 5.30 மணிக்கு நடை திறப்பு, 6.40 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு அத்தாழ பூஜை, 8.00 மணிக்கு ஹரிவராசனம் மற்றும் 8.10 மணிக்கு நடை அடைப்பு நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !