விடய புரம் பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் ஏமாற்றம்!
திருவாரூர்: கொரடாச்சேரி அருகே விடையபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீவரதராஜö பரு மாள் கோவில் சிதிலமடைந்து வருவதுடன் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி யுள்ளது. உரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே விடையபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீவரதராஜö பரு மாள் கோவில் இந்து சமய அறநிலையத் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் பெரு மாள், சீதேவி, பூதேவி யுடன் அருள் பாலிக்கிறார். கோவிலின் எதிரில் மிகப்பெரிய விருத தீர்த்தம் என்று அழைக்கப்படும் குளம் உள்ளது. இக்குளத்தில் குளித்தால் மோட்சம் அடைவதுடன் சொர் கத் திற்கு செல்வதாக கூறப்படுவதுடன், திருமணத்தடை மற்றும் புத்திர பாக் கியம் வேண்டிய அதிகளவில் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். தற்போது இக்கோவில் சிதிலமடைந்து வருவதுடன் ஆக்கிரமிப்பின் பிடியி ல் சிக்கியுள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் வழியும் ஆக்கிரமிப்பால் கோவிலுக்குசெல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், கோவிலில் மேற்கூறைகளில் முட்பு தற்கள் மண்டியுள்ளதுடன், மழை காலங்களில் மூலவரான வரதராஜ பெரு மாள், சீ÷ தவி ,பூதேவியின் மீது மழை நீர் கொட் டுகிறது. மேலும் மேற் கூறை காரைக ள் பெயர்ந்து விழுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் அதிகளவில் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே உரிய துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கோவிலை புதுப்பிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.