தென்னாடுடைய சிவனே போற்றி என்று சொல்வது ஏன்?
ADDED :4364 days ago
சிவனை பஞ்சபூதங்களின் வடிவாகவும் வணங்குகிறோம். அதனால், அவர் இந்த பிரபஞ்சத்திற்கே பொதுவானவர். பஞ்சபூத தலங்களும், சிவவழிபாட்டில் தோய்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களும், இறைவன் அடியாருக்கு நடத்திய திருவிளையாடல்களும் தென்னகமான தமிழகத்தை மையமிட்டே அமைந்தன. அதனால், தென்னாடுடைய சிவனே என சிறப்பித்துக் கூறுகிறோம்.