உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் தங்கக்கூரை போட்டவர்!

சிதம்பரத்தில் தங்கக்கூரை போட்டவர்!

சிதம்பரத்திலுள்ள சிற்றம்பலத்திற்கு இரண்யவர்மன் என்னும் மன்னன் தங்கக்கூரை அமைத்ததாக கோயில் புராணமும், முதலாம் பராந்தக சோழன், அமைத்ததாக வரலாறும் கூறுகிறது. இரண்டாம் பராந்தகன், கோயிலுக்கு நிலங்களை வழங்கினான். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய முதலாம் ராஜராஜன், நிலம் அளக்கும் கருவிக்கு சிற்றம்பலக்கோல் என்றும், நெல் அளக்கும் மரக்காலுக்கு ஆடல்வல்லான் என்றும் பெயர் சூட்டினான். கோயிலில் நந்தவனம், திருமுறைப்பாராயணம் ஆகியவற்றை ஏற்படுத்தியதும் முதலாம் ராஜராஜனே. முதலாம் குலோத்துங்கனுக்கு திருநீற்றுச்சோழன் என்ற பெயருண்டு. இவனும் பேரம்பலத்திற்கு தங்கக்கூரை திருப்பணி செய்தான். ராஜராஜனின் மகளான குந்தவை, நடராஜருக்கு தங்கக் குடம், கண்ணாடி அளித்து வழிபட்டாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !