பழநி கோயில் உண்டியல் ரூ 1.10 கோடி வசூல்!
ADDED :4420 days ago
பழநி: பழநி கோயில் உண்டியல் 16 நாட்களில், ஒரு கோடியே 10 லட்சத்து 32 ஆயிரத்து 280 ரூபாய் வசூலாகியுள்ளது. பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை கார்த்திகை மண்டபத்தில் நடந்தது. இதில், ரொக்கமாக ஒரு கோடியே 10 லட்சத்து 32 ஆயிரத்து 280 ரூபாய், தங்கம் 320 கிராம், வெள்ளி 13 ஆயிரத்து 470 கிராம், வெளிநாட்டு கரன்சி 715 கிடைத்துள்ளது. இது 16 நாளில் ஆகிய வசூல்.தங்கம், வெள்ளியில் ஆன, தாலி,மோதிரம், ஆள்ரூபம், பாதம், கொலுசுகள், காசுகள், வீடு, கார் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர். இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் ,உதவி ஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி உடனிருந்தார்.