குமாரநல்லூர் அம்மன் கோவில் சிறப்பு தபால் தலை வெளியீடு!
பாலக்காடு: கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள, புகழ்பெற்ற குமாரநல்லூர் கார்த்தியாயினி அம்மன் கோவில், தேசிய புனித சின்னமாக உயர்ந்துள்ளதாக, கேரள மாநில உள்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற குமாரநல்லூர் கார்த்தியாயினி அம்மன்கோவில், இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் திருகார்த்திகை உற்சவத்தை காண மாநிலம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில, திருக்கார்த்திகை விழாவையொட்டி இந்திய தபால் துறையின் "மை ஸ்டாம்ப் திட்டத்தில், சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. இதில், குமாரநல்லூர் அம்மன் கோவிலின் படம் இந்த தபால்தலையில் இடம்பெற்றுள்ளது. கேரள மாநில உள்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன்; நேற்று முன்தினம் சிறப்பு தபால்தலையை வெளியிட, கார்த்தியாயினி கோவில் தந்திரி கடியக்கோல் கிருஷ்ணன் நம்பூதிரி பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: "குமாரநல்லூர் அம்மன் கோவில் தேசிய புனித சின்னமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். கோவில் நிர்வாக அதிகாரி மதுரை அச்சுதன் நம்பூதிரி, மணிக்குட்டன் நம்பூதிரி, உற்சவ கமிட்டி ஒருங்கிணைப்பாளர் அனில்குமார், முரளி, ஆனந்தக்குட்டன், அனூப் சந்திரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் பேசினர். திருக்கார்த்திகை உற்சவத்தையொட்டி கோவில் வளாத்தில் சிறப்பு "ஸ்டாம்ப் கள் விற்பனை நடக்கிறது.