திருவாதிரை விரதமிருங்க!
ADDED :4362 days ago
மார்கழி திருவாதிரை விரதம் சுலபமானது. அன்று அதிகாலையே சிவாலயம் சென்று நடராஜரின் தாண்டவ தீபாராதனை தரிசிக்க வேண்டும். வீட்டில் களி சமைத்து திருவிளக்கின் முன் படைத்து தானம் செய்வதுடன், அன்றைய காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். அன்று முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். திருவாலங்காடு (திருவள்ளூர்), சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய நடராஜரின் பஞ்ச சபைகளில் ஏதாவது ஒன்றுக்குச் சென்று நடராஜரை வழிபட்டு வருவது சிறப்பானது.