மூணாறில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்!
ADDED :4355 days ago
மூணாறு: மூணாறில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் ஐயப்ப பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூணாறில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில், ஆண்டு தோறும் பக்தர்கள் ஊர்வலம் நடத்தி ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். இந்தாண்டு நேற்று முன்தினம், பழைய மூணாறு பார்வதியம்மன் கோயிலில் இருந்து பூக்காவடி, செண்டை மேள தாளத்துடன் நடைபெற்ற ஊர்வலத்தில், சுவாமி ஐயப்பன் பவனி வந்து அருள்பாலித்தார். இந்த ஆண்டு, முதன்முறையாக சுப்பிரமணிசுவாமி கோயில் வளாகத்தில் அக்னி வளர்க்கப்பட்டு, பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊர்வலம் தொடங்கிய போதும், முடிவடைந்த போதும் கருடன் வட்டமடித்தது.