உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி மாத பிறப்பையொட்டி, பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். புகழ்பெற்ற 108 வைணவ தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோயிலில், நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டி, ஆண்டாள் திருப்பாவை பட்டு சார்த்தப்பட்டு, ரெங்கமன்னாருடன் வெள்ளிக்கிழமை குறடில் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆண்டாளை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !