கிணத்துக்கடவு கோவில்களில் மார்கழி சிறப்பு பூஜை
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடப்பதால், கூட்டம் அலைமோதுகிறது. கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சிவலோகநாதர், பொன்மலை வேலாயுதசாமி, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம், கருமலை அய்யாசாமி, பிளேக் மாரியம்மன், மாமாங்கம் பத்ரகாளியம்மன், ஆதிபட்டி விநாயகர், அண்ணாநகர் செல்வகணபதி போன்ற கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.அதில், அதிகாலை 5.00 மணிக்கு, சிவலோகநாதருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்படுகிறது. பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் வேலாயுதசாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, தினமும் ஒவ்வொரு அலங்காரமாக சிவன், சக்தி, வேடன், ராஜா, இளவரசன், அய்யப்பன், திருசெந்தூர் முருகன், வெங்கடாசலபதி போன்ற அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இதனால், பக்தர்கள் கூட்டம் பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் அலைமோதுகிறது.