உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாவை ஒரு மகாநதி!

திருப்பாவை ஒரு மகாநதி!

கோவை:""திருப்பாவை ஒரு மகாநதி; அதில், இறங்கும் முன் ஏன் இறங்குகிறோம் என்று உணர வேண்டும், என, கோவையில் நடந்த நிகழ்ச்சியில், வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார். கோவை திருப்பாவைக் கமிட்டி மற்றும் ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம் சார்பில் 55வது ஆண்டு மார்கழி மாத உபன்யாச நிகழ்ச்சி கோதண்டராமஸ்வாமி கோவிலில் நேற்று துவங்கியது. இன்று முதல் வரும் 2014ம் ஆண்டு ஜன., 13ம் தேதி வரை, தினமும் காலை 7.00 மணி முதல் 8.30 மணி வரை திருப்பாவை உபன்யாச நிகழ்ச்சியும், மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை மஹாபாரத உபன்யாச நிகழ்ச்சியும் நடக்கிறது. நேற்று மாலை உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் "திருப்பாவை எனும் தலைப்பில் பேசுகையில், ""வேதங்களுக்கு வித்தாக விளங்குவது திருப்பாவை. பூமாதேவியின் அவதாரமே ஆண்டாள். பிறந்தது முதலே பக்தியாக இருந்த பெருமை ஆண்டாளுக்கு உரியது. மார்கழி மாதத்தில் திருப்பாவையின் 30 கோஷரங்கள், 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது; முதலாவதாக நாள் கோஷரம் வழங்கப்படுகிறது. திருப்பாவை ஒரு மகாநதி; அதில், இறங்கும் முன் ஏன் இறங்குகிறோம் என்று உணர வேண்டும், என்றார். கோவை திருப்பாவை கமிட்டி தலைவர் பாலசுந்தரம், செயலாளர் பார்த்தசாரதி, பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !