விவேகானந்தர் ரதத்திற்கு வரவேற்பு
ADDED :4356 days ago
திருப்போரூர்: திருப்போரூர் பகுதி கிராமங்களில், சுவாமி விவேகானந்தர் ரதத்திற்கு, நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழா, நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமகிருஷ்ண மடத்தின் மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரத ஊர்வலம், கடந்த 12ம் தேதி துவங்கி, பிரதான ஊர்கள் வழியாக நடத்தப்படுகிறது. நேற்று காலை 9:30 மணிக்கு திருவடிசூலம, ஞானபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்து, ரத ஊர்வலம் துவங்கியது. பின் கரும்பாக்கம், செம்பாக்கம், திருப்போரூர், கேளம்பாக்கம், படூர் வரை சென்றது. மடத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.