ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நாளை (டிச., 18) நடக்கிறது. காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை, 4 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதம் வழங்கப்படுகிறது. * காவேரிப்பப்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் நடக்கிறது. * தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் மகாலிங்கேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள நடக்கிறது.