வடிவுடையம்மன் கோவில் திருப்பணி: நிதிக்குழு ஆய்வு!
திருவொற்றியூர்: திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில் திருப்பணிகளை, 14வது நிதிக்குழு உறுப்பினர்கள், நேற்று ஆய்வு செய்தனர்.இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியமான, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலுக்கு. 13வது நிதிக்குழு சார்பில் அளித்த, 45 லட்சம் ரூபாயில், ராஜகோபுரம், ஆதிபுரீஸ்வரர் சன்னிதி, நடராஜர் சன்னிதி, தியாகராஜர் சன்னிதி ஆகியவை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், 14வது நிதிக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள், சுசம்மா நாத், கோவிந்த ராவ், சுதிப்டோ மண்டல் ஆகியோர் கொண்ட குழு, நேற்று இந்த பணிகளை ஆய்வு செய்தது.இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், திருப்பணிகளுக்கு இன்னும், நிதி தேவைப்படுகிறதா என, 14வது நிதிக்குழுவின் சார்பில், எங்களிடம், கேட்கப்பட்டது. அதற்குஉரிய விவரங்களை அவர்களிடம் அளித்து உள்ளோம், என்றார்.