உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா

பொள்ளாச்சி கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆருத்ரா தரின விழா கடந்த 9ம் தேதி துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று இரவு 7:00 மணிக்கு சிவகாமி அம்மன் திரு ஊஞ்சல் நிகழ்ச்சியும்; நள்ளிரவு 3:00 மணிக்கு ஸ்ரீ நடராஜர் அபிஷேக பூஜைகளும் நடந்தது. பின், இன்று காலை 8:30 மணிக்கு ஆருத்ரா தரிசனமும்; நாளை (19ம் தேதி) மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. பொள்ளாச்சி தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. காலை 5:00 மணிக்கு அபிஷேக பூஜைகள், திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடக்கிறது. பின் அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஒடையகுளம்: ஒடையகுளம் ராஜராஜேஸ்வரி, காமாட்சி அம்மன் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நேற்று மாலை 3:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு விசாலாட்சி தேவியர் காசி விஸ்வநாதர் சமேதராய் பட்டி வலம் வருதல், காலை 6:30 மணிக்கு தரிசனம் தந்தருளல், காலை 6:45மணிக்கு மங்கல நாண் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !