உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடாரண்யேஸ்வரர் கோவிலில்இன்று ஆருத்ரா அபிஷேகம்!

வடாரண்யேஸ்வரர் கோவிலில்இன்று ஆருத்ரா அபிஷேகம்!

திருவாலங்காடு: வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், இன்று இரவு, ஆருத்ரா அபிஷேகம் நடைபெறுகிறது.திருத்தணி, திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம், ஆருத்ரா அபிஷேகம் மற்றும் தரிசனம் நடைபெறுகிறது. இந்தாண்டின், ஆருத்ரா அபிஷேக விழா, இன்று இரவு, 9:00 மணிக்கு துவங்கி, மறுநாள் (நாளை) அதிகாலை, 4:00 மணி வரை நடைபெறுகிறது. இதில், பல்வேறு வகையான பழங்களால், நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.நாளை (19ம் தேதி) அதிகாலை, 5:00 மணிக்கு, கோபுர தரிசனம், பகல், 1:00 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும், 20ம் தேதி காலை, 9:00 மணிக்கு, சாந்தி அபிஷேகமும் நடைபெறுகிறது.பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில்...கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் உள்ள காமாட்சி அம்மன் உடனாய சோளீஸ்வரர் கோவிலில், நடராஜ மூர்த்திக்கு, மகா திருவாதிரை ஆருத்ரா அபிஷேக உற்சவம், காலை, 5:00 மணிக்கு நடக்கிறது.பின், நடராஜ சுவாமி, மாணிக்கவாசகருக்கு காட்சி தரும் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. காலை, 6:25 மணிக்கு, அருணோதய தரிசனமும், 7:30 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !