உலக அமைதிக்காக குத்துவிளக்கு பூஜை
சங்கராபுரம்: சங்கராபுரம் நுகர்பொருள் வாணிக கிடங்கு பின்புறம் உள்ள வழிகாட்டி மாரியம்மன் கோவிலில் உலக அமைதிக்காக குத்துவிளக்கு பூஜை நடந்தது. அகில இந்திய கிராம பூஜாரிகள் பேரவை மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் நாட்டார் ராமலிங்கம், பூஜாரி பேரவை மாவட்ட அமைப்பாளர் கலிய மூர்த்தி, சைவ சித்தாந்த பேராசிரியர் ஜம்புலிங்கம், ஜோதிடர் கண்ணன் முன்னிலை வகித்தனர். ஆலய நிறுவனர் சிலம்பரசன் வரவேற்றார். விளக்கு பூஜையை திருவண்ணாமலை அபேதானந்தா சுவாமிகள் துவக்கி வைத்தார். முன்னதாக நல்லூர் சிவசுப்ரமணிய குருக்கள், கார்த்திகேய சிவம், விக்ராஜ குருக்கள், ரவி குருக்கள் குழுவினரால் கோ பூஜை, கணபதி ஹோமம்,யாக வேள்வி பூஜை நடந்தது. ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, ஜனார்தனன், பூஜாரிகள் பேரவை ஒன்றிய அமைப்பாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.