ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம்
ADDED :4352 days ago
கம்பம்: காமயகவுண்டன்பட்டி ஐயப்ப சேவா சங்கம் சார்பில், ஐயப்பன் ஆராட்டு விழா மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஸ்ரீ செல்வகணபதி திருக்கோயில். சென்னையசாமி பொம்மம்மாள் மடத்தில் நகர் நல கமிட்டி தலைவர் மோகன்தாஸ் தலைமையில் ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா, நெய்அபிஷேகம், பாலாபிஷேகம், புஷ்ப அர்ச்சனை உள்ளிட்ட சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். மாலை ரத ஊர்வலம் நடைபெற்றது.