உவரி சுயம்புலிங்கசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED :4351 days ago
திசையன்விளை: டிச.18-உவரி சுயம்புலிங்கசுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா நடந்தது. இதனையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 3 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடர்ந்து அபிஷேகம், உதயமார்த்தாண்டபூஜை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகும், கோபூஜை, மூலவர் மற்றும் நடராஜர் சிவகாமி அம்பிகைக்கு சிறப்பு பூஜை, ஆருத்ரா தரிசனம், உற்சவர் நடராஜர் சிவகாமி அம்பிகை றெவ்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் நடன கோலத்தில் உலா வருதல், மேளம், வாண வேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது. ஏற்பாடுகளை உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஜ்ணன் செய்திருந்தார்.