வால்பாறை ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை விழா துவக்கம்!
ADDED :4422 days ago
வால்பாறை: வால்பாறை நகர் ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின் 28ம் ஆண்டு மண்டலபூஜைத்திருவிழா நேற்று காலை 9.15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை சுப்புராஜ்குருசாமி ஏற்றினார். இதில், நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. வரும் 21ம் தேதி அன்னதான விழாவும், 22ம் தேதி சுவாமி ஊர்வலமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்ப சேவாசங்கத்தலைவர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.