தாயார்கள் இடம் மாறிய தலம்
ADDED :4357 days ago
பெருமாள் கோயில்களில் பெருமாளின் வலது புறத்தில் ஸ்ரீதேவி தாயாரும், இடதுபுறத்தில் பூதேவி தாயாரும் அமர்ந்திருப்பர். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயிலில் தாயார்கள் இடம் மாறி உள்ளனர். ஜடாயுவுக்கு பெருமாள் இறுதிகாரியம் செய்யும்போது தன் தொடை மீது அவரது உடலை வைத்து தீ மூட்டினாராம். அந்த வெப்பம் தாளாமல் தாயார்கள் இடம்மாறி நின்றதாக சொல்வார்கள். வெப்பம் தாளாத ஸ்ரீதேவி தாயார் தலையை சற்று சாய்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.