தன்வந்திரி பீடத்தில் பிரத்யங்கிரா ஹோமம்
ADDED :4425 days ago
கீழ்புதுப்பேட்டை: தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி பிரத்யங்கிரா ஹோமம் நடத்தப்பட்டது. தன்வந்திரி பீடத்தின் அருகில் 30 ஆயிரம் சதுர அடியில் மண்டபம் அமைத்து யாக குண்டம் அமைக்கப்பட்டது. இதில் கோ பூஜையுடன், வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம், சகல தேவதா காயத்ரி ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடைபெற்றன.