பஞ்சநதீஸ்வரர் கோவிலில் 1,008 தீப வழிபாடு
ADDED :4418 days ago
பெரம்பலூர்: குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழாவை முன்னிட்டு 1,008 தீப வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது. நடராஜ பெருமான் சிவகாமி அம்பாள் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை தொடர்ந்து, உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், அனைவரிடத்திலும் சகோதரத்துவும் வளர்ந்திட 1,008 தீப வழிபாடு (சகஸ்ர தீபம்) புதன்கிழமை இரவு நடைபெற்றது.