உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரண்டு டன் எடையில் பிரமாண்ட வேல்: முனியப்பன் கோயிலில் பிரதிஷ்டை

இரண்டு டன் எடையில் பிரமாண்ட வேல்: முனியப்பன் கோயிலில் பிரதிஷ்டை

நாமக்கல் அருகே, முனியப்பன் கோயிலில், பிரமாண்ட வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ளது, மணப்பள்ளி முனியப்பன் கோயில். இங்கு, 4.50 லட்சம் ரூபாய் செலவில், மிகப்பெரிய வேல் அமைக்க, கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்கான பணி, நாமக்கல்லில் உள்ள, "செட்டிநாடு வெண்கல வார்ப்பு பட்டரையிடம் ஒப்படைக்கப்பட்டது. பட்டரை நிர்வாகத்தினர் தொடர்ந்து, 30 நாட்கள் பணியாற்றி, இரண்டு டன் வெங்கலத்தில், அலங்கார வேலை உருவாக்கினர்; அதன் உயரம், 26.5 மீட்டர், அகலம், 4 அடி; வேலில், 800 மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. வேல் தயாரிப்பு முழுமை அடைந்ததை தொடர்ந்து, டிச 20, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !