அவிநாசியில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு வழிபாடு!
ADDED :4337 days ago
அவிநாசி: அவிநாசியில் ஐயப்ப பக் தர்கள் பேரவை சார்பில், சிறப்பு வழிபாடு, ஊர்வலம் ஆகியன நடந்தது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவ மண்டபத்தில், ஐயப்ப சுவாமிக்கு, சாஸ்தா ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியன நடந்தது. அவிநாசி வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று மாலை, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், ஐயப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். செண்டை மேளம் முழங்க, சுவாமி வீதியுலா காட்சி நடந்தது.