திருவண்ணாமலை கோயில் எதிரில் ஆக்கிரமிப்பு அகற்றம்!
ADDED :4340 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயில் எதிரே இருந்த ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகள் நேற்று அகற்றப்பட்டன. கோயில் முடி காணிக்கை செலுத்தும் பகுதிகளை மறைத்தபடி ஆக்கிரமிப்பு தள்ளுவண்டிக் கடைகள் இருந்தன. இதனால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, காவல்துறை பாதுகாப்புடன் நேற்று ஆக்கிரமிப்பு தள்ளுவண்டிக் கடைகள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டன.