உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு!

கோயில் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு!

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் காலியாக உள்ள கோயில் பாதுகாப்புப் பணியிடங்களில் சேர முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்னாள் படைவீரர் நல இயக்குநர் இர.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பாதுகாப்புப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு 40 முதல் 60 வயது வரையுள்ள உடல் தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !