உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவிரி அன்னைக்கு குடகு மாவட்டத்தில் மணிமண்டபம், 12 அடி உயர சிலை!

காவிரி அன்னைக்கு குடகு மாவட்டத்தில் மணிமண்டபம், 12 அடி உயர சிலை!

தமிழர் -  கன்னடர் கூட்டு முயற்சியில், குடகு மாவட்டத்தில் காவிரித் தாய்க்கு மணிமண்டபம் கட்டி, 12 அடி உயர சிலை வைத்து குடமுழுக்கு நடத்தி இருக்கிறார்கள். அகத்திய முனிவரின் கமண்டலத்தை காகம் தட்டிவிட்டதால் அதிலிருந்த நீர் கொட்டி விரிந்து காவிரி உருவானதாக புராணம் சொல்கிறது. குடகில் குட்டிக் குழந்தையாய் பிறக்கும் காவிரி நதி, அகன்ற காவிரியாகி கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் உயிர் நாதமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. அகன்ற காவிரி தொடங்கும் இடத்தில்தான் காவிரித் தாய்க்கு மணிமண்டபம் கட்டி சிலை வைத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !