உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆங்கிலம் புத்தாண்டு தினத்தில் விஐபி தரிசனம் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

ஆங்கிலம் புத்தாண்டு தினத்தில் விஐபி தரிசனம் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

வரும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று வழக்கத்தைவிட பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1-ம் தேதி அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை மட்டுமே வி.ஐ.பி.க்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். காலை 6 மணி முதல் இரவு முழுவதும் சாமானிய பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். அன்று முழுவதும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படும். மலைவழிப்பாதை வழியாக கால்நடையாக வரும் பக்தர்கள் 25000 பேர் நாராயணகிரி பூங்கா வழியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இ-தரிசனம் மூலம் சுதர்சன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4800 பேர் மட்டுமே அன்று தரிசனம் செய்ய முடியும். அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை வி.ஐ.பிக்கள் அனுமதி. இவர்கள் இம்மாதம் 31-ம் தேதி நேரடியாக திருமலையில் உள்ள இணை நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.  சர்வ தரிசனம் காலை 6 மணிக்கு தொடங்குகிறது. பக்தர்கள் டிசம்பர் 31-ம் தேதி மாலை திருமலையில் உள்ள எம்.பி.சி. விடுதி எண் 26 அருகே இருந்து மாலை 5 மணி அளவில் வைகுண்டம் - 2 காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !