உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் தேர் பகுதியில் குப்பை பக்தர்கள் வேதனை!

திருப்பரங்குன்றம் தேர் பகுதியில் குப்பை பக்தர்கள் வேதனை!

திருப்பரங்குன்றம்: சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமி தெய்வானையுடன் சிறிய சட்டத்தேரில் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த தேர் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே பாதுகாக்கப்பட்டு வருகிறது. வருடத்தில் இரண்டு நாள்கள் முருகன் திருவீதி உலாவரும் இந்த தேரைச் சுற்றி குப்பை தொட்டிகளும், அவ்விடத்தில் பொதுமக்கள் குப்பை கொட்டி அசுத்தம் செய்வதும் வாடிக்கை உள்ளது . புனிதமான தேர் உள்ள இடத்தில் அசுத்தமாக இருப்பதைப் பார்த்து பக்தர்கள் வேதனையடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !