வெங்கடாஜலபதி கோவிலில் மரக் கன்று நடும் விழா
ADDED :4320 days ago
பெரியகுளம்: தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோவில் மார்கழி வழிபாட்டுக் குழு சார்பில், புதன்கிழமை கோவில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. மார்கழி 10 ஆம் நாளை முன்னிட்டு, ஆண்டாள் திருப்பாவை வழிபாட்டுக் குழு சார்பில், இக் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும், கோவில் வளாகம் மற்றும் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.