உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கிரிவீதிகளில் கண்காணிப்பு கேமரா: பழநியில் பாலிதீனுக்கு தடை!

பழநி கிரிவீதிகளில் கண்காணிப்பு கேமரா: பழநியில் பாலிதீனுக்கு தடை!

பழநி: பழநிகோயில் கிரிவீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், வெளியூர் பக்தர்கள் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவரக் கூடாது, என கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார். சுற்றுலா தலமான பழநியில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடையுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டு, தைப்பூசத் திருவிழாற்கு வரும் பக்தர்கள், அதிகளவில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவருகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து தைப்பூச ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது," வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகளை பழநிக்கு வரும் அரசு பஸ்களில் ஓட்டவேண்டும். நகராட்சி, தேவஸ்தானம் விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகளை அமைக்க வேண்டும். பழநியில் நான்கு கிரிவீதிகள், பஸ் ஸ்டாண்ட் ஆகிய முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கிரிவீதிகளில் கடைகள் வைக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !