வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு!
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு ஹோமம் நடந்தது.அட்ட வீரட்டானத்தில் ஒன்றான, திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு உலக நன்மைக்காக இரவு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. காலை 7 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை. புண்யாக வாசம், கடஸ்தாபனம், ஸ்ரீருத்ர ஆவாகனம், அக்னிகாரியம், 64 பைரவர் பூஜைகள், பைரவர் ஹோமம், ஸ்ரீருத்ரத்ரிசதி ஹோமம், சிறப்பு திரவியாகுதி, பூர்ணாஹுதி முடிந்து கடம் புறப்பாடாகி சம்கார மூர்த்தி, மகா பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. சண்டிகேஸ்வரருக்கு சிவ நிர்மால்ய சமர்ப்பணம், சேத்ரபால பைரவருக்கு நிறைவு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் நெய்தீபம் ஏற்றி 64 முறை கோவிலை வலம்வந்து வழிபட்டனர்.