பழநி வையாபுரி குளம் தூர்வாரும் பணி துவக்கம்!
ADDED :4325 days ago
பழநி: பழநி வையாபுரி குளத்தை தூர்வாரி, சுத்தம் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. பரம்பரியமிக்க வையாபுரிக்குளம், ஒரு காலத்தில் பக்தர்கள் புனித நீராடும் குளமாக இருந்தது. தற்போது, மருத்துவக்கழிவு, கோழிக்கழிவு, ஓட்டல்கழிவு, சாக்கடை கழிவுநீர் என நகரின் மொத்த குப்பையும் கொட்டுவதால், குளத்தில் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சுத்தம் செய்ய பழநி விவேகானந்தா டிரஸ்ட் நிர்வாகத்தினர். நகராட்சி, பொதுபணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இதன்படி, நேற்று வையாபுரி குளத்தை துர்வாரி சுத்தம் செய்யும் பணியை கலெக்டர் வெங்கடாசலம் துவக்கிவைத்தார். நகராட்சி கமிஷனர் சரவணக்குமார், தலைவர் வேலுமணி, தாசில்தார் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.