உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் அய்யப்ப சுவாமிக்கு மண்டல பூஜை விழா!

விழுப்புரம் அய்யப்ப சுவாமிக்கு மண்டல பூஜை விழா!

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள தர்மசாஸ்தா அய்யப்ப சுவாமிக்கு 32ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 9:15 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு மகா அபிஷேகமும், 11:00 மணிக்கு தீபாராதனையும், மதியம் அன்னதானமும் நடந்தது. மாலை 6:30 மணிக்கு அய்யப்பசுவாமிக்கு பல்வேறு பழங்களால் அலங்காரம் செய்து, வழிபாடு நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு அய்யப்ப பக்தர்களின் சிறப்பு பஜனை வழிபாடும், இரவு 8:30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. இதில், கனகராஜ் குருசாமி தலைமையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !