ராமநாதபுரம் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை!
                              ADDED :4326 days ago 
                            
                          
                          ராமநாதபுரம்: ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார்கோவில் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நேற்று நடந்தது. காலையில் சிறப்பு அபிஷேகம், பஜனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு நடந்த சுவாமி வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வண்டிக்காரத்தெரு மாரியம்மன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் மண்டல பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜை விழாவை முன்னிட்டு நேற்று காலை ஐயப்பன் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதானையை விஜயராகவன் பட்டர், மாதவன் ஆகியோர் செய்தனர். குருசாமி கோட்டைச்சாமி தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.