திருப்புத்தூர் ஐயப்பன்கோயில் மண்டலாபிஷேகம்
ADDED :4336 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் மகரஜோதி யாத்திரை விழாவை முன்னிட்டு, நேற்று ஐயப்பனுக்கு மண்டலாபிஷேக ஆராதனை நடந்தது. கடந்த டிச.16ல் கணபதிஹோமம்,சாஸ்தா ஹோமத்துடன் விழா துவங்கியது.தினசரி காலை 8 மணிக்கு லட்சார்ச்சனை நடந்து வருகிறது. நேற்று காலை,மூலவருக்கும்,உற்சவருக்கும் மண்டலாபிஷேக அபிஷேக, ஆராதனை நடந்தது.மாலை மூலவர் சந்தனக்காப்பில் தரிசனம் தந்தார். ஏற்பாட்டினை பக்தர்கள், ஐயப்ப சேவா சங்கம்,மகரஜோதி யாத்திரைக் குழு, தர்மசாஸ்தா ஆலயத்தினர் செய்து வருகின்றனர்.