உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்களே! இடது கண் துடிக்கிறதா?

பெண்களே! இடது கண் துடிக்கிறதா?

பெண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மை  என்பதை ராமாயண நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.  மனைவியைப் பிரிந்து தவித்த ராமன், சுக்ரீவன் இருவரும் அனுமனின் உதவியால் நண்பர்களாக மாறினர். அப்போது அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதற்கு  அக்னியை சாட்சியாக வலம் வந்தனர். அப்போது  சுக்ரீவன், ராமா! இன்பத்திலும், துன்பத்திலும் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்போம், என சத்தியம் செய்து கொடுத்தான். தற்காலத்தில் திருமணச் சடங்கில் புதுமணத்தம்பதிகள் அக்னிசாட்சியாக வலம் வருகின்றனர். புராண  காலத்தில் நட்பிற்கும் அக்னி சாட்சி இருப்பதை அறிய முடிகிறது. அப்போது அசோக வனத்தில் இருந்த சீதையின் இடது கண் துடித்தது. துன்பம் நீங்கி ராமனோடு மீண்டும் சேரும் காலம் வந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தாள். ஆண்களுக்கு வலதுகண் துடித்தால் நல்லது. ராவணனுக்கு இடதுகண் துடித்தது. அவன் அழிந்து போனான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !