ஜலவ்கா ன்னா என்ன தெரியுமா?
ADDED :4346 days ago
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, வெண்ணிற ஆடையுடன் சங்கு, சக்ரதாரியாக அமிர்த கலசத்தை ஏந்தியபடி தன்வந்திரி எழுந்தருளினார். விஷ்ணுவே இவ்வாறு வந்தார். இவருடைய கையில் ஒரு அட்டைப்பூச்சி இருக்கும். இதற்கு ஜலவ்கா என்று பெயர். கிருமிகள் உடலிலுள்ள ரத்தத்தில் கலந்து நோயைப் பரப்புகின்றன. அட்டையை உடலில் விட்டால் ரத்தத்தை உறிஞ்சி விடும். பிறகு புதுரத்தம் பாய்ச்சலாம். ரத்தத்திலுள்ள தோஷத்தைப் போக்கவே இந்தப் பூச்சியை அவர் கையில் ஏந்தியிருக்கிறார். தனு என்ற சொல்லுக்கு அம்பு, கணை, தைத்தல் என்ற பொருள்கள் உண்டு. எனவே, தன்வந்திரியை அறுவை சிகிச்சையில் கை தேர்ந்தவர் என குறிப்பிடுவர். ஆரோக்கியம் அருள்பவரான தன்வந்திரியை, வைத்திய ராஜா என போற்றுகிறது பத்மபுராணம்.