12 அடி உயர குரு பகவானுக்கு புத்தாண்டு சிறப்பு பூஜைகள்
ADDED :4339 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே குரு பகவானுக்கு புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பையூரில் ஸ்ரீஞானகுரு தட்சணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறையில் 12 ராசியை குறிக்கும் விதத்தில் 12 அடி உயரமுள்ள குருபகவான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏற்ற இக்கோவிலில் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வரும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய் (31ம்தேதி) இரவு 11 மணிக்கு 12 அடி உயர குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், இரவு 12:01 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீஞானகுரு தட்சணாமூர்த்தி அறக்கட்டளைக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.