சிங்கவரம் ரங்கநாதருக்கு பவித்ரோற்சவ நிகழ்ச்சி
ADDED :4405 days ago
செஞ்சி: செஞ்சி அடுத்துள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோற்சவம் கடந்த 27ம் தேதி முதல் மூன்று நாள் நடந்தது. விழாவையொட்டி முதல் நாள் மாலை 6 மணிக்கு விஜயகுமார் பட்டாச்சாரியார் தலைமையில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திரு மஞ்சனமும், ஹோமமும் நடந்தது. இரண்டாம் நாள் சிறப்பு ஹோமமும், மூலவர், தாயாராம்மாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதர் உற்சவருக்கு பவித்ரமாலை அணிவித்து சிறப்பு தீபாராதனை செய்தனர். மூன்றாம் நாள் மகா பூர்ணாஹூதியும், கலச நீர் கொண்டு சாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும் செய்தனர். புதுச்சேரி அமைச்சர் ராஜவேலு, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, ஊராட்சி தலைவர் ரங்கநாதன், தேர் திருப்பணிக் குழு குணசேகர், இளங்கீர்த்தி, ஏழுமலை, முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.