உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

பெருந்துறை: பெருந்துறை, ஸ்ரீகோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில், ஜனவரி, ஒன்றாம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்க உள்ளது.அன்று காலை, 5 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை, 3 மணிக்கு அனுக்ஞை, விஷ்வக்ஷேன பூஜை, மஹா சங்கல்ப்பம், கலச பூஜை, 4 மணிக்கு மஹா ஹனுமந்த ஹோமம், திரவியாகுதி, மஹா பூர்ணஹுதி, 6 மணிக்கு ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு, 7 மணிக்கு வடமலை சாற்றுதல், மஹா அலங்கார தீபாரானை, 9 மணிக்கு பஜனை மற்றும் பந்தசேர்வை துவக்கம், 12 மணிக்கு மஹா தீபாராதனை நடக்க உள்ளது.பூஜைகளை, ஈங்கூர் பாலகிருஷ்ணன் அய்யர் செய்ய உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !