காட்டு வீர ஆஞ்சநேய கோவிலில் தங்கத்தேர்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரத்தில் உள்ள காட்டுவீர ஆஞ்சநேய சாமி கோவிலில், அனுமந்த் ஜெயந்தி விழா மற்றும் புதிய தங்கத்தேர் சம்ப்ரோசனா விழா, வரும், ஜனவரி, 1ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, இன்று காலை, 9 மணிக்கு, கணபதி ஹோமம், சுத்திபுண்ணியா வஜனம், வாஸ்து ஹோமம் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு பஞ்ச சுத்த ஹோமம், மஹா சுதர்சன ஹோமம் ஆரம்பம் நடக்கிறது. நாளை காலை, 7 மணிக்கு மஹா சுதர்சன மூல மந்திர ஹோமமும், மாலை, 5 மணிக்கு உற்சவ விக்ரகங்களுக்கு, மஹா சாந்தி அபிஷேகம் மற்றும் மஹா மங்கள ஹார்த்தி தீர்த்த பிரசாத வினியோகம் நடக்கிறது. ஜனவரி, 1ம் தேதி காலை, 4 மணிக்கு மேல் மஹா பூர்ணாகுதி, மஹா கும்பாராதனை, மஹா மங்கள ஹார்த்தி தீர்த்த பிரசாதம் விநியோகம் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு கோவிலில் உள்ள புதியதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் பிரகார உற்சவம் நடக்கிறது. விழா நடைபெறும் மூன்று நாட்களில், ஆகம ரீதியாக லோக ஷேமத்துக்கும், உலக நன்மைக்காகவும், ராகவேந்திர ஆச்சார் தலைமையில், மஹா சுதர்ஸன ஹோமம் நடக்கிறது.