துறையூர் அனுமந்த் ஜெயந்தி விழா: ஆஞ்சநேயருக்கு பூஜை
துறையூர்: துறையூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சத்யநாராயண பெருமாள் கோவிலில், 19ம் ஆண்டு அனுமந்த் ஜெயந்தி விழா, கடந்த, 25ம் தேதி துவங்கி வரும், இரண்டாம் தேதி வரை நடக்கிறது. கோவிலில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேய ஸ்வாமிக்கு முதல் நாள் மாலை பழங்களாலும், இரண்டாம் நாள் வெண்ணெய் காப்பு செய்தும், மூன்றாம் நாள் தானியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. ஒவ்வொரு நாள் காலை திருமஞ்சனம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (30ம் தேதி) வாசன திரவியங்களாலும், நாளை மாலை பூ பந்தல் அலங்காரம் செய்தும், வழிபாடு நடைபெறும். புத்தாண்டு அன்று அனுமந்த்ஜெயந்தி விழாவையொட்டி, ஸ்வாமிக்கு வடைமாலை சாற்றியும், மாலை, ஆறு மணிக்கு கல் அங்கி அலங்காரம் செய்தும், சிறப்பு வழிபாடு செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படும். நிறைவு நாள் அன்று, மாலை பச்சை வர்ணம் அலங்காரம் செய்து விடையாற்றி விழா நடைபெறும். விழாவில் பங்கேற்று அனைவரும் ஸ்வாமி அருள் பெற வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.