உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்

ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்

துறையூர்: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், துறையூர் சிவன் கோவில் கிளை சார்பில், 53ம் ஆண்டு ஸ்வாமி ஐயப்பன் சிறப்பு அபிஷேகம், மண்டல பூஜை, 1008 விளக்கு பூஜை, அன்னதானம் நடந்தது. ஐயப்ப சேவா சங்கம் சார்பில், சிவன் கோவிலில் உள்ள ஐயப்ப ஸ்வாமிக்கு, ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. மார்கழி மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமை ஐயப்ப ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம், 1,008 பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது. மண்டல பூஜையில் ஐயப்பன், மாளிகை புரம், கருப்பண்ணார் ஆகிய ஸ்வாமிகளை குறிப்பிடும் வகையில், ஆளுயர குருவாயூர் விளக்குகளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, பூஜை செய்யப்பட்டது. பூஜையில் பெருமாள்மலை கிரிவல கமிட்டி கவுரவ தலைவர் டாக்டர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விஜயராகவன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராஜாத்தி, நகராட்சி தலைவர் முரளி, ஜெமீந்தார் பள்ளி தாளாளர் முத்துக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., அரங்கராசன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சேவா சங்க துறையூர் கிளை தலைவர் ராஜு, செயலாளர் மதனகோபால் மற்றும் சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !