மார்கழி மாதம் கோலப்போட்டி அன்னை சித்தர் பரிசு வழங்கல்
பெரம்பலூர்: துறைமங்கலம் அரசு ஊழியர் குடியிருப்பில், எளம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் கோலப்போட்டி நடத்தப்பட்டு, பரிசளிப்பு விழா நடந்தது. எளம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில், மார்கழி மாதம் முழுவதும் பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பெண்களுக்கான கோலப்போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் துறைமங்கலம் அரசு ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவுக்கு அரசு ஊழியர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் வீராசாமி, ஆசிரியர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகா சித்தர்கள் டிரஸ்ட் நிறுவனர் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள், கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இதில் அரசு அலுவலர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.