அன்னதான இலைகளில் அங்கப் பிரதட்சணம்
ADDED :4341 days ago
கோவில்பட்டியில் லோக்வீர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற மண்டல பூஜை மற்றும் அன்னதான விழாவில் அன்னதான இலைகளில் ஐயப்ப பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். ஹரிஹர புத்ர ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் அன்னதானமும் நடைபெற்றது. அன்னதானத்தின் கடைசி பந்தி முடிந்த பின், அந்த இலைகளை எடுக்காமல் அதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், குழந்தைகள், பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்தனர்.