பகவதியம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ. 54 ஆயிரம்
ADDED :4341 days ago
கன்னியாகுமரி: பகவதியம்மன் கோவில் அன்னதான உண்டியல் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை மூலம் இக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இக்கோவில் மண்டபத்தில் அன்னதான திட்டத்துக்காக தனி உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படும். இதில் ரூ. 54 ஆயிரத்து 200 வசூலாகக் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.