மேல் மருவத்தூரில் பக்தர்கள் மீது தாக்குதல்!
திருவெண்ணெய்நல்லூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் கண்மூடித்தனமாக பக்தர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கீரிமேடு கிராம மக்கள், நற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: கீரிமேடு கிராமத்தைச் சேர்ந்த 86 பேர், கடந்த 24ம் தேதி மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோவிலுக்கு செல்ல, மாலை அணிந்து விரதம் இருந்தனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேவேந்திரன் தலைமையில், இருமுடியுடன் நேற்று முன்தினம் பஸ்சில் புறப்பட்டு , மாலை 6:00 மணிக்கு மேல்மருவத்தூரை அடைந்தனர். அங்கு புற்றுகோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு, இரவு 8:00 மணிக்கு ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றனர். செவ்வாடை அணிந்த சிலர், இருமுடி எங்கே என கேட்டபாது, புற்றுக் கோவிலில் செலுத்தி விட்டதாக கூறினர். செவ்வாடை தொண்டர்கள், இவர்களை திட்டியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட, கீரிமேட்டை சேர்ந்த தர்மன்,30, அகிலன், 29, சிவகுரு, 20, மணிமாறன், 23 ஆகிய நால்வரையும் ஒரு வாகனத்தில் ஏற்றிச் ன்öறு, கல்லூரி அறையில் வைத்து, செவ்வாடை தொண்டர்கள் 20 பேர், இரவு 8:30 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை அடித்துள்ளனர். இதில், தர்மனுக்கு ரத்கக் காயம் ஏற்பட்டும் விடவில்லை. 1:30 மணிக்கு, தர்மன் மற்றும் அகிலனுக்கு மாற்று சட்டை கொடுத்து, இச்சம்பவத்தை வெளியில் கூறக் கூடாது என எச்சரித்து, பஸ்சில் ஏற்றி விட்டனர். பக்தர்களை கண்மூடித்தனமாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.